தமிழக செய்திகள்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் 9-ம் ஆண்டு ஐப்பசி மாத திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 8 மணி அளவில் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கல்யாண கோலத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி ஜே.எஸ்.குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ.பள்ளியின் நிறுவனர் செந்தில்குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது