தமிழக செய்திகள்

திருநெல்வேலி: மிரட்டல் வழக்கில் தலைமறைவான நபர் கைது

திருநெல்வேலியில் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

தினத்தந்தி

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட எட்டான்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 1 ஆண்டு 4 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மாரியப்பனை மானூர் போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை