தமிழக செய்திகள்

திருநெல்வேலி: கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கொலை வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லி, கொண்டாநகரத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 33) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஒன்றரை (1) மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், கணேசனுக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கணேசனை சீதபற்பநல்லூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.