தமிழக செய்திகள்

திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திசையன்விளையைச் சேர்ந்த ஒரு வாலிபர் கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மூலைக்கரைப்பட்டி போலீசார் கவனத்திற்கு வந்தது.

தினத்தந்தி

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், பெட்டைகுளம், சிறுகுளத்தை சேர்ந்த குட்டி என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 19) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர் மேற்சொன்ன ஆறுமுகம் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் ஆறுமுகம் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை