சென்னை
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக அரூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஆர்.முருகன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதே போல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சிவசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்ட தினகரன் ஆதரவு நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.