தமிழக செய்திகள்

திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசு வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருத்தணி வட்டார தலைவர் வினோத் தலைமை தாங்கினா. மாநில தலைமை நிலைய செயலாளர் ரகுவரன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி