திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லிஃப்டுக்குள் இருந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். மேலும் மாணவனுடன் சென்ற இளைஞர்கள் இரணடு பேர் காயமடைந்தனர்.
உணவு பொருட்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டின் இரும்பு கயிறு அறுந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திருமண மண்டபம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமானது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.