திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பாண்டூர் கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது.
இதில் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்த சின்னபாபு ரெட்டி என்பவர் காரில் டீசல் நிரப்பி சென்று உள்ளார். பின்னர், கார் சிறிது தூரம் சென்றதும் என்ஜீன் பழுதாகி நின்று உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த காரின் உரிமையாளர் அந்த பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்கள் மண்ணெண்ணெய் கலப்படம் செய்த டீசலை ஊற்றியதால் வாகனத்தில் இருந்து புகை வந்ததாக கூறி திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.