தமிழக செய்திகள்

திருவள்ளூர் லிஃப்ட் விபத்து; கைது செய்யப்பட்ட 3 பேருக்கு நீதிமன்ற காவல் - மாஜிஸ்திரேட் உத்தரவு

திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று உள்ளது.

அந்த திருமண மண்டபத்தில் 13-ந்தேதி நடைபெற்ற திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சியின் போது கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் கீழ் தளத்தில் இருந்து மேல்தளத்திற்கு உணவு எடுத்துக்கொண்டு வந்தனர். அப்போது லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் லிஃப்டுக்குள் இருந்த 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 இளைஞர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மேஜிஸ்திரேட் மோகனப்ரியா உத்தரவிட்டுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்