தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் வாக்கு எந்திரத்தில் கோளாறு; ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்!

திருவண்ணாமலையில் வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகராட்சி 10வது வார்டில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. திடீரென, வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

முன்னதாக, சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 1 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. சென்னை சோழிங்கநல்லூர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.பின்னர் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

அதேபோல, கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் புனித வளனார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது. அங்கு வாக்கு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தமுள்ள 39 வார்டுகளில் இதுவரை 23 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது