சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து 47 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு 03.03.2026 அன்று காலை 10.00 மணி முதல் 31.03.2026 அன்று காலை 10.00 மணி முடிய வினாடிக்கு 240 கன அடி வீதம் 28 நாட்களுக்கு ஒரே தவணையாக 580.80 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 9432.76 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் பாசனவசதி பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.