வடுவூர்:
திருவாரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தமாதம்(ஆகஸ்டு) 48-வது மாநில ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் திருவாரூர் மாவட்ட அணி வீராங்கனைகள் தேர்வு வருகிற 24-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் வடுவூர் அருகே உள்ள கட்டக்குடியில் நடைபெற உள்ளது. 20 வயதுக்குள்ளும், 65 கிலோ உடல் எடைக்குள்ளும் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் இந்த தேர்வு போட்டியில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.