தமிழக செய்திகள்

திருவாரூர்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவனின் முகம் சிதைவு...!

படுகாயமடைந்த சிறுவன் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

தினத்தந்தி

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருவாரூரில் அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விழுந்ததில் வீட்டின் உள்ளே இருந்த 7-ம் வகுப்பு மாணவனின் முகம் சிதைந்துள்ளது. படுகாயமடைந்த சிறுவன் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட வீடு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று மேலும் 22 அரசு தொகுப்பு வீடுகள் அந்த பகுதியில் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு