தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சென்னை,

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டம் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவை கூடியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசலாம் எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, ஆளுநர் உரையாற்றி வருகிறார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்