தமிழக செய்திகள்

ஜன.5-ந் தேதி தமிழக சட்டசபை கூட்டம்: கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும்...!

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் சட்டசபை மீண்டும் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.

தினத்தந்தி

சட்டசபை கூட்டம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடந்து வந்தது.

தொற்று குறைந்த நிலையில் ஜார்ஜ் கோட்டையில் வருகிற 5-ந்தேதி சட்டசபை கூட்டம் நடைபெறும் என்றும், கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு

இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 10-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றம்

ஒமைக்ரான் பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், சமூக இடைவெளியுடன் சட்டமன்ற கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்டத்தை மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, வருகிற 5-ந்தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதுதொடர்பாக, தமிழக சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கவர்னர் அறிவிப்பு

தமிழக அரசிதழில் கடந்த மாதம் 13-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், வரும் 5-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டம் தற்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கத்தின் 3-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் 5-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்