தமிழக செய்திகள்

நீங்கள் கோடிக்காக நடித்தபோது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம்: சூர்யாவுக்கு தமிழிசை பதில்

நீங்கள் கோடிக்காக நடித்தபோது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம் என்று நடிகர் சூர்யாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் சூடுபிடித்து இருந்த போது, நீட் தேர்வை எதிர்த்து நடிகர் சூர்யா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்த நிலையில், நடிகர் சூர்யா எழுதிய கட்டுரை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:- "நீங்கள் கோடிக்காக நடித்தபோது எங்களைப்போன்றோர் தெருக்கோடியில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.

ஒரு சிலரைப் பார்த்துவிட்டு நீங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள். நான் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் பார்த்துவிட்டு நீட் வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால், நீட் குறித்து ஒரு நடிகருக்குத் தெரியுமா இல்லை ஒரு மருத்துவருக்குத் தெரியுமா? உண்மைநிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் கிராமப்புறத்துக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. நீட் தேர்வு என்றால் என்னவென்று தெரியாத 6-ம் வகுப்பு மாணவர்களைக் கூட கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்துக்கு தூண்டி வருகின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு