தமிழக செய்திகள்

தமிழக காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு; நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நீதித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 1,713.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-