சென்னை,
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், 8 ஆம் கட்டமாக ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராத சூழலிலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதம் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதைப் பின்பற்றி மாநில அரசுகளும் தளர்வுகளை அறிவிக்கின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறை ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் முன்பாகவும் மருத்துவ நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. அந்த வகையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திரையரங்குள், புறநகர் ரெயில் சேவைகள் ஆகியவற்றிற்கு வரும் மாதம் அனுமதி அளிக்கப்படுமா? என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.