தமிழக செய்திகள்

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம்: கவர்னர்,முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் அவரது உருவச்சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

சென்னை,

உத்தமர் காந்தியடிகளின் 75-வது நினைவு நாளானது தேச அளவில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி தியாகிகள் தினம் ஆக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் சாதிய பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட அண்ணலின் நினைவாக தீண்டாமை உறுதிமொழியும் மேற்கொள்ளப்படுகிறது.

இதனை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் உருவச்சிலைக்கு கீழ்வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு (ஞாயிற்றுக்கிழமை) இன்று காலை 10 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற் றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை