தமிழக செய்திகள்

சூரிய சக்தி கொள்கையின் கீழ் பம்பு செட்டுகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சூரிய சக்தி கொள்கையின் கீழ் பம்பு செட்டுகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

சூரிய சக்தி கொள்கையின் கீழ் பம்பு செட்டுகளுக்கு 90% மானியம் வழங்கப்படும். ரூ.50 கோடியில் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 500 சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கப்படும். சிறுதானியங்களை அதிகளவில் பயிரிட மானியம் வழங்கப்படும். 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிட ரூ. 27.80 கோடி மானியம் வழங்கப்படும். கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பட்டயப்படிப்பு இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்