தமிழக செய்திகள்

மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

மெரீனா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. #JayaMemorial #Marina

தினத்தந்தி

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் வேலைப்பாடுடன் கூடிய நினைவு மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவில் சிறந்த கலைநயத்துடன் கூடிய வடிவமைப்புடன் நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா காலை 9 மணியளவில் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நடைபெற்றது.விழாவுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினர். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து