தமிழக செய்திகள்

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்திப்பு

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழா முடிவில் பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர், நேரு விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் பழனிசாமியை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த இந்த ஆலோசனையின் போது துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உடன் இல்லை. அதிமுக- பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்