தமிழக செய்திகள்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவந்த சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நிறைவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவடைந்தது நீதிமன்றம் தடை வித்திருப்பதால் சட்டப்பேரவையை முற்றுகையிட செல்லவில்லை

சென்னை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் பேரணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

அடையாள அட்டை , தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் தற்போது நிறைவு பெற்று உள்ளது.

சட்டமன்றத்தை முற்றுகையிட சென்னை ஐகோர்ட் தடைவிதித்து இருப்பதால் பேரணி சேப்பாக்கம் வரை சென்று அங்கு போராட்டத்தை முடித்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது. பேரணியில் பங்கேற்க வந்தவர்கள் அமைதியாக கலைந்து செல்கின்றனர்.