தமிழக செய்திகள்

தமிழகத்தில் மேலும் 296- பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 4 மாதங்களுக்கு பிறகு 300-க்கு கீழ் குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 296 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 74 பேர், செங்கல்பட்டில் 20 பேர், கோவையில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்பத்திரியில் 280 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 289 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 199 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...