தமிழக செய்திகள்

கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை

தமிழகத்திற்கு கூடுதல் ரெயில்களை இயக்குமாறு ரெயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 7 ஆம் தேதி மாநிலத்திற்குள் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கான டிக்கெட் முன்பதிவுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரெயில்வே ஊழியர்கள் கணிணி பிரிண்டர் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு கூடுதல் ரெயில்களை இயக்குமாறு ரெயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை - கன்னியாகுமரி, சென்னை-தூத்துக்குடி, சென்னை-மேட்டுப்பாளையம், சென்னை எழும்பூர் - செங்கோட்டை, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கும் ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு