சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதாகக் கூறி மணிகண்டன் தன்னை ஏமாற்றியதாக நடிகை சாந்தினி போலீசில் புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். முன்ஜாமின் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது.
இதனால் தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தனிப்படை மதுரை விரைந்துள்ள நிலையில், மற்றொரு தனிப்படை சைபர் கிரைம் போலீசாரிடம் விவரங்கள் சேகரிப்பதாக கூறப்படுகிறது.