சென்னை
தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள, அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.
படஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 2018-2019 தமிழக அரசின் வருவாய் ரூ 1.81 லட்சம் கோடி , செலவு ரூ. 2.04 லட்சம் கோடி. பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிப்பு. 2018-19 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு.
* மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழக பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு, மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் அதிகரிக்கும் எனக் கணிப்பு.
* மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.786 கோடி ஒதுக்கீடு.
* தஞ்சை தமிழ் பல்கலை.யில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்பட்டு, ஆண்டு மானியமாக ரூ.2 கோடி வழங்கப்படும்.
* வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ. 3,243 கோடியில் திட்டம் தயாரிப்பு.