தமிழக செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2, 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு துறைகளில் குரூப் 2,2 ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கும்  19-ம் தேதியே கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14-ம் தேதி தேர்வு நடைபெறும். மொத்தம் 2,030 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு விண்ணப்பிக்க, தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து