சென்னை,
டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த அருள்மொழி ஐஏஎஸ் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் தேவைப்பட்டது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக ஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கா.பாலச்சந்திரன் இதற்கு முன்பு வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளராக பதவி வகித்து வந்தார்.