தமிழக செய்திகள்

தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் மோடி அறிவித்த நிவாரணம் ரூ.20 லட்சம் கோடி. ஆனால் உண்மையில் கணக்கிட்டால் ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 650 கோடி தான். இது மொத்த ஜி.டி.பி.யில் 0.91 சதவீதமே தவிர 10 சதவீதம் அல்ல. பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2018-19-ம் ஆண்டில் 5.87 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், 2019-20-ம் ஆண்டில் இது 2.57 லட்சமாக குறைந்துள்ளது.

இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதிலிருந்து இந்தியாவை மீட்டு, மீண்டும் தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்கவேண்டும். வெறும் அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு நிதியை ஒதுக்க வேண்டும். இதை செய்யாதவரை பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு