தமிழக செய்திகள்

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும்: தொமுச பொதுச்செயலாளர் சண்முகம்

சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள சிஐடியூ அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் 23 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. #TNBusStrike #TransportDepartment #CITU

தினத்தந்தி

சென்னை

சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள சிஐடியூ அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் 23 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.

கூட்டத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்ததும் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு முன்வர வேண்டும். சட்டரீதியாக நோட்டீஸ் வழங்கிய பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்; 16 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காமல் அரசு காலதாமதம் செய்து வருகிறது . எங்களுக்கு தெரியாமலேயே ஊதிய உயரவு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.பயிற்சி இல்லாத ஓட்டுனர்களை வைத்து பேருந்துளை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது. அனைத்து கோட்ட தலைமை அலுவலகம் முன் நாளை மாலை குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கினால் எதிர்த்து போராடுவோம் என சிஐடியூ தலைவர் சவுந்தராஜன் கூறினார்.

#BusStrike #TransportUnion #TransportWorkers #TNGovernment #CITU

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு