தமிழக செய்திகள்

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கபொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம்

கூடலூரில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மாட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூடலூரில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜூதீன் நிலவேம்பு கசாயம் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது தங்களது வீடுகளில் உள்ள தேங்காய் செரட்டை, டயர்களில் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்காமல் வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...