சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- எந்த விருதை எவருக்கு வழங்க வேண்டுமோ, அதை உரிய நேரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். இதன்மூலம் சங்கரய்யாவின் அர்ப்பணிப்புமிக்க, தூய்மையான, எளிமையான, நேர்மையான பொதுவாழ்வுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- சங்கரய்யாவுக்கு அளித்த விருது, தமிழர் ஒருவர் அவரது மாணவ பருவம் தொட்டே பொதுத்தொண்டில் சுயமரியாதை இயக்கத்தில் தொடங்கி பொதுவுடைமை கொள்கையில் பூத்து, காய்த்து, கனிந்து, தொண்டில் பழுத்தவருக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட விருது. இந்த விருதை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் பாராட்டுகள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.