குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னிய சமுதாயத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் வி.பாரதிதாசன் ஆகியோருக்கு தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ஆர்.எம்.கோபி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் இளம் பருதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் என்.குமார், மாவட்டதலைவர் கு.வெங்கடேசன், மாவட்ட அமைப்பு தலைவர் ஆர்.பாலாஜி, பாபு யாதவ் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், நிர்வாகிகள் பாபு, அன்பரசன், சரவணன், சுரேஷ்குமார் நகர செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் காமராஜர், அரவிந்தன் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தபால் அனுப்பினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியபடி ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.