தமிழக செய்திகள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ''சைக்கிள் சின்னம் கிடைக்கும்'' - ஜி.கே.வாசன் நம்பிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நான்காவது முக்கிய கட்சியான தமாகாவுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தமாகா தரப்பில் நிர்வாகிகள் கோவைத்தங்கம், வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுடைய வெற்றிக்காக தமாகா இளைஞரணியினர் களப்பணி ஆற்றுவர். எதிர்க் கட்சிகளின் பொய் வாக்குறுதிகளுக்கு முன், அதிமுகவின் நிஜ வாக்குறுதிகள் நிச்சயம் வெல்லும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு அறிவித்துள்ள அறிவிப்புகளும் தேர்தலில் எதிரொலிக்கும்.

தொகுதிப் பங்கீடு குறித்த தமாகாவின் எண்ணத்தை அதிமுகவிடம் நிச்சயம் பிரதிபலிப்போம். அதற்கேற்றவாறு இலக்கை நிர்ணயிப்போம். கூட்டணிப் பேச்சுவார்த்தை, சுமுகமான முறையில் நடைபெற்று அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்க, நெருங்க எத்தனை புதிய அணிகள் வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் முதல் அணியாக, வெற்றி அணியாக அதிமுகவே செயல்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் எங்கள் செயல்பாடு தொடர்ந்து இருக்கும். தேர்தல் ஆணையத்தின் கடைசி நாள் வரை முயற்சியை மேற்கொள்வோம்''.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்