தமிழக செய்திகள்

மாணவர்கள் கல்விக்கடன் பெற இன்று சிறப்பு முகாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளன.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் ஏராளமான வசதியற்ற மாணவர்கள் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் கல்விக்கடன் பெற அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு எளிதாக கல்விக்கடன் பெறுமாறு மாணவர்கள் பெற்றோர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்டு, சாதி சான்றிதழ், வருமான சான்று, இருப்பிடச் சான்று, புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், கல்லூரி கட்டண ரசீது, முதல் பட்டதாரி என்றால் அதற்குரிய சான்று, கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகளையும் தயாராக எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை