தமிழக செய்திகள்

2019-2020-ம் நிதி ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் - அதிகாரிகள் தகவல்

2019-2020-ம் நிதி ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 2019-2020-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு அபராதமின்றி தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஜனவரி 10-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு பிறகும் தாக்கல் செய்யாதவர்களுக்காக அபராதத்துடன் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 31-ந்தேதி அதாவது இன்று (புதன்கிழமை) வரை நீடிக்கப்பட்டு இருந்தது. தற்போது இன்று கடைசி தேதி என்பதால் இதுவரை கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் இன்று கணக்குகளை தாக்கல் செய்யலாம்.

அதற்கு பிறகு கணக்கு தாக்கல் செய்ய இயலாது. இந்த தேதி நீட்டிப்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேற்கண்ட தகவல்களை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு