தமிழக செய்திகள்

மார்ச் 27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் ரூ.92.77க்கும் டீசல் ரூ.86.10க்கும் விற்பனையாகிறது.

தினத்தந்தி

சென்னை,

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இடையில் ஒரு நாள் கூட விலை குறைந்தபாடில்லை. அதிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக 24 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

அதன்படி, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா 16 காசு குறைந்திருந்தது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு, அதன் விலை குறைந்து காணப்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசும், டீசல் லிட்டருக்கு 35 காசும் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.77 ரூபாய், டீசல் லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்