சென்னை,
நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் 15-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11க்கும், டீசல் ரூ.86.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது.