கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... திருப்புதல் தேர்வுகள் தள்ளிவைப்பு

சென்னையில் 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து இருந்தார்.

தினத்தந்தி

சென்னை,

மிக்ஜம் புயல் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதனை ஈடுசெய்யும் விதமாக சென்னையில் 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து இருந்தார். அதன்படி நாளை (சனிக்கிழமை) பள்ளிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு நடைபெற உள்ளதால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற 10ம் தேதி வேளை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நாளை நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் அன்றைய மாற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்து உள்ளார். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு