தமிழக செய்திகள்

ஏலாக்குறிச்சி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு நாளை ஜமாபந்தி

ஏலாக்குறிச்சி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை)ஜமாபந்தி நடக்கிறது.

தினத்தந்தி

அரியலூர் தாலுகா, ஏலாக்குறிச்சி உள் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நாளை (செவ்வாய்க்கிழமை) அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த ஜமாபந்தியில் ஏலாக்குறிச்சி உள் வட்டத்திற்குட்பட்ட விழுப்பணங்குறிச்சி, கீழகொளத்தூர், சின்னப்பட்டாக்காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழிகயமனவாளம், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு