தமிழக செய்திகள்

தொப்பையாறு அணை நிரம்பியது

ஒரே ஆண்டில் 2-வது முறையாக தொப்பையாறு அணை நிரம்பியது. இதனால் தர்மபுரி, சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

நல்லம்பள்ளி:-

ஒரே ஆண்டில் 2-வது முறையாக தொப்பையாறு அணை நிரம்பியது. இதனால் தர்மபுரி, சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொப்பையாறு அணை

நல்லம்பள்ளி அருகே தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட செக்காரப்பட்டி பகுதியில் உள்ளது தொப்பையாறு அணை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அனைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதை தொடர்ந்து ஒரே ஆண்டில் தொப்பையாறு அணை தற்போது 2-வது முறையாக நிரம்பி உள்ளது. இந்த அணை திறக்கப்பட்டால் வலது மற்றும் இடதுபுற கால்வாய் வழியாக செல்லும் அணை நீரின் மூலம் தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

2-வது முறையாக நிரம்பியது

தற்போது தொப்பையாறு அணை தனது முழு கொள்ளளவான 50 அடியை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. அணையின் ரம்மியமான அழகை காண அந்த பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அணையின் நலன்கருதி நாளை அல்லது நாளை மறுநாள் அணை திறக்கப்படுவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஒரே ஆண்டில் இருமுறை தொப்பையாறு அணை நிரம்பியுள்ளதால் இரு மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணை தனது முழு கொள்ளவை எட்டி உள்ளதால், தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்