தமிழக செய்திகள்

கிழிந்த பனியனுடன் விண்ணப்பம் வாங்க வந்த விவசாயி டெபாசிட் தொகைக்காக காலி மது பாட்டில்கள் சேகரிப்பு

திருவாரூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகைக்காக வீதிகளில் கிடந்த காலி மது பாட்டில்களை சுயேச்சை வேட்பாளர் சேகரித்தார். மேலும் கிழிந்த பனியன் அணிந்தபடி விண்ணப்பம் வாங்குவதற்காக விவசாயி வந்தார்.

தினத்தந்தி

திருவாரூர்,

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் நேற்று திருவாரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில அமைப்பாளர் ஆறுமுகம் விண்ணப்பம் வாங்க வந்தார்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருவாரூரில் டாஸ்மாக்கடை, பஸ் நிலையம், சாலை ஓரம் உள்ளிட்ட பகுதிகளில் கிடந்த காலி மது பாட்டில்களை தாங்கள் வைத்திருந்த சாக்குப்பையில் ஆறுமுகம், தன்னுடன் வந்தவருடன் சேகரித்தார்.

இது குறித்து ஆறுமுகம் கூறுகையில், தமிழகத்தில் அதிக அளவில் மது குடிப்போர் இருப்பதாகவும், எனவே மது குடிப்போரின் நலனுக்காக திருவாரூர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுகிறேன். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் தொகைக்காக, டாஸ்மாக் கடை வீதிகளில் கிடக்கும் மது பாட்டில்களை தான் சேகரித்து அதில் இருந்து கிடைக்கும் தொகையை கொண்டு டெபாசிட் கட்டி மனு தாக்கல் செய்யப் போகிறேன் என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை