தமிழக செய்திகள்

சுற்றுலா பயணியிடம் மாநகராட்சி ஊழியர் போல் நடித்து மோசடி - மெரினாவில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றுலா வந்த நபரிடம் இருந்து நூதன முறையில் கார் திருடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றுலா வந்த நபரிடம் இருந்து நூதன முறையில் கார் திருடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமத்ரா தங்கஜோதி என்பவர் குடும்பத்துடன், கடந்த 12-ம் தேதி சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். கார் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு மணற்பரப்பு சென்றுள்ளார்.

அப்பேது, கார் பார்க்கிங் டோக்கன் கொடுக்கும் மாநகராட்சி ஊழியர், கார் தவறான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியும், சரியான இடத்தில் நிறுத்துவதாகவும், அவரிடம் இருந்து கார் சாவியை வாங்கியுள்ளார். பின்னர் அந்த காரை மாநகராட்சி ஊழியர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் சுமத்ரா தங்கஜோதி புகார் அளித்தார்.

விசாரணையில், மாநகராட்சி ஊழியர் போல் நடித்த மர்ம நபர், காரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பேலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்