தமிழக செய்திகள்

விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்-அய்யப்ப பக்தர்கள்

இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகளவில் அணிவகுத்து செல்கின்றன.

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில் மழை சற்று குறைந்ததால், அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் கணிசமாக குறைய தொடங்கியது. அதனால், படிப்படியாக ஒவ்வொரு அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகளவில் அணிவகுத்து செல்கின்றன. அய்யப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக குவிந்துள்ளதால், அருவிக்கரை முழுவதும் அய்யப்ப பக்தர்களின் தலைகளாகவே தென்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் இன்று காலையில் முற்றிலும் மழை குறைந்து வெயில் முகம் காட்ட தொடங்கியதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், சுற்றுலா பயணிகளும் அய்யப்ப பக்தர்களும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மழை சற்று குறைந்த போதிலும், காலை மற்றும் மாலை வேளைகளிலும் பகல் நேரங்களில் குளிர் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் வெளியில் செல்லும் பொதுமக்கள் ஸ்வெட்டர் அணிந்து செல்கின்றனர்.

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை