தமிழக செய்திகள்

வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று அனுமதிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் கடந்த 12-ந் தேதி முதல் குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 6-வது நாளாக நேற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் ஆர்ப்பரித்தபடி கொட்டி வருகிறது. ஏற்கனவே சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் நேற்று குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள்தெரிவித்தனர். அதன்படி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்