தமிழக செய்திகள்

அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்:

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்துச் செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தற்போது பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் விவசாயத்திற்காக 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதையொட்டி அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும்போது அவர்கள் மீது சிறிய கற்கள் விழும் ஆபத்து உள்ளது. எனவே அகஸ்தியா அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர். இதே அளவு தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டால் இன்றும் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...