தமிழக செய்திகள்

திற்பரப்பு அருவியில் குளிக்க 8வது நாளாக தடை நீட்டிப்பு

பேச்சுப்பாறையில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.

தினத்தந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதேவேளை, கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பேச்சுப்பாறை அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பேச்சுப்பாறையில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால், திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 7 நாட்களாக அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அருவிக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளதால் திற்பரப்பு அருவில் குளிக்க 8வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேவேளை, பேச்சுப்பாரை அணையில் நீர் வெளியேற்றம் நாளை நிறுத்தப்பட்ட வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகள் நாளை முதல் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து