தமிழக செய்திகள்

கொடிவேரி அணையில் 5-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்குத் தடை

கொடிவேரி அணையில் தொடர்ந்து 5-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

தொடர் கனமழை காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து 4,740 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

மேலும் பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நேற்று 5-வது நாளாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT