தமிழக செய்திகள்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தினத்தந்தி

திருவட்டார்,

விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சிறப்பு வாய்ந்ததாக திற்பரப்பு அருவி விளங்கி வருகிறது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்ற னர்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று அதிகாலை முதலே திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தந்தனர்.

உற்சாகமாக குளித்தனர்

பின்னர், அருவியின் அருகில் சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று, பச்சைசேல் என காணப்பட்ட புல்வெளி தோட்டம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர், நீச்சல் குளத்தில் நீந்தியும் பொழுது போக்கினர். அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் மழையில் அந்த பகுதியில் குளு குளுவென இருந்தது.

கோதையாற்றியில் தற்போது தண்ணீர் மிதமாக பாய்வதால் அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும், திற்பரப்பு வந்த சுற்றுலா பயணிகள் அருவியின் மேற்பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதிக வாகனங்கள் திற்பரப்புக்கு வந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று ஆடி மாதம் முதல் தேதி என்பதால் அருவியின் அருகில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலிலும் காலை, மாலை என இருவேளைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்